×

கடும் விமர்சனங்கள் எதிரொலி.. கோவை அறிவுசார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி படம் அகற்றம்!!

கோவை : கோவையில் உள்ள அறிவுசார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றப்பட்டது. கோவை மாநகராட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையம், 20 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர் பாரம்பரிய சிலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த அறிவு சார் நூலகத்தில் புத்தகங்கள் வைக்கும் அலமாரியில், கோவையின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக முதல் தளத்தில் உள்ள அலமாரியில் ஆதியோகி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆதியோகி படத்தை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவு சார் மையத்திற்கும், ஆதியோகிக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே திட்டமிட்டு, கோவையின் அடையாளம் என்பது போல் ஈசாவை உருவகப்படுத்தி வருகிறார்கள். தற்போது அறிவு சார் மையத்திலும் ஆதியோகி படத்தை நுழைத்து இருக்கின்றனர்.

அரசு உடனடியாக அந்தப் படத்தை அப்புறப்படுத்த வேண்டும். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று ஆதியோகி படம் தற்போது அகற்றப்பட்டது. மேலும் ஆதியோகி படத்தை அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரிகளுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

The post கடும் விமர்சனங்கள் எதிரொலி.. கோவை அறிவுசார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி படம் அகற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Adiyogi ,Coimbatore ,Addis Road ,Coimbatore Corporation ,Thiruvalluvar ,Coimbatore Knowledge Library ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...